search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம்"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்த்தின் போது போலீசார் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளனர். இதை கண்டித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் எதிர் கட்சிகள், தனனார்வ அமைப்பினர், மாணவ அமைப்பினர் உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இன்றும் எதிர் கட்சிகள் சார்பாக கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் திண்டுக்கல்லில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பாண்டி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், நிர்வாகிகள் கணேசன், ராணி, பாபு, மாவட்ட குழு கல்யாண சுந்தரம், நகர செயலாளர் ஆசாத், ஒன்றிய செயலாளர் அஜய் கோஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சந்தானம், நிர்வாகிகள் ஜெயமணி, பாலுபாரதி, ரவி, மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு உடனே பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷம் எழுப்பினர்.

    ×